1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (17:24 IST)

நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பு: ஜெயகுமார்..

நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் திமுக தான் பொறுப்பு என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து நிர்வாகிகளிடம் அவர் பேசியபோது 17 வருடங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றாமல் என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார். 
 
மேலும் தேர்தல் வரும்போது மட்டும் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இவ்வாறு பேசி வருகிறார் என்றும் அவர் கூறினார். 
 
நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களும் திமுகவும் தான் பொறுப்பு என்றும் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என சொன்னவர்கள் ஏன் செய்யவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 
 
நீட் தேர்வு மசோதா தொடர்பாக எத்தனை முறை குடியரசுத் தலைவரை திமுக எம்பிக்கள் சந்தித்தார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
Edited by Mahendran