திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: சனி, 7 டிசம்பர் 2019 (21:51 IST)

ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் ஆள் கூலி வேண்டுமென்று....கம்பு விவசாயிகள் கோரிக்கை

ஏக்கருக்கு ரூ5 ஆயிரம் ஆள்கூலி வேண்டுமென்றும் கருகும் பயிர்களை காக்க, பயிர்காப்பீட்டு திட்டத்தினையோஅல்லது மானியமோ வழங்க சோளம் மற்றும் கம்பு விவசாயிகள் கோரிக்கைகரூர் அருகே கருகும் கம்பு மற்றும் சோளப் பயிர்களால், வேதனைக்குள்ளாகும் விவசாயிகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கையாகும்.
ஏக்கருக்கு ரூ 5 ஆயிரம் ஆள்கூலி வேண்டுமென்றும் கருகும் பயிர்களை காக்க, பயிர்காப்பீட்டு திட்டத்தினையோ அல்லது மானியமோ வழங்க சோளம் மற்றும் கம்பு விவசாயிகள் கோரிக்கை
 
கரூர் அருகே கருகும் கம்பு மற்றும் சோளப்பயிர்களால், வேதனைக்குள்ளாகும் விவசாயிகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை
 
கரூர் மாவட்டம், தாந்தோன்றி ஊராட்சி ஒன்றியம், மூக்கணாங்குறிச்சி கிராமத்தில் உள்ள கொரவப்பட்டி பகுதியில் வசிப்பவர் தங்கவேல் என்பவரது மகன் அன்பு (வயது 40), மற்றும் அதே பகுதியை சார்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் அன்பரசன் (வயது 41) ஆகியோர் இப்பகுதியில் சுமார் 20 ஏக்கரில் சோளம், கம்பு, துவரை, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழையினாலும், பனியினாலும் ஆங்காங்கே சோளம் மற்றும் கம்பு பயிர்கள் கருகி வருகின்றன. மேலும், பருவநிலை மாற்றத்தினாலும், தற்போது பெய்யும் மழையினாலும் 3 ஏக்கரில் விளைவிக்கப்பட்டுள்ள சோளம், ஒரு ஏக்கரில் கூட லாபம் ஈட்ட முடியாது என்றும், அதிலிருந்து அந்த பயிர்களையாவது கால்நடை தீவனத்திற்கு எடுக்க முடியுமா ? என்று பார்த்தால் அது கூட முடியாது.

ஆகவே, அன்று மழை பெய்யாத நிலையிலும், விலைவாசி ஏற்றத்தினாலும் 20 லிருந்து 30 விசுவு கட்டுகள் ஆடு, மாடுகள், குதிரைகளுக்கு தீவனமாக கிடைக்கும், 10 கட்டுகள் கொண்ட ஒரு விசுவு இரண்டாயிரம் ரூபாய் வரை கிடைக்கும் நிலையில் இன்று ரூ 150 க்கு கேட்க கூட ஆள் இல்லை, ஆகவே ஒரு ஏக்கருக்கு ரூ 7 ஆயிரம் வரை செலவாகின்றது.

அதுவும் அருப்புக் கூலி இல்லாமல்,. அருப்புக் கூலி மட்டும் ஒரு ஏக்கருக்கு ரூ 5 ஆயிரம் என்று மொத்தம் சேர்த்தால் ரூ 12 ஆயிரம் ஒரு ஏக்கருக்கு மட்டும் செலவு மட்டும் ஆகின்றது. ஆகவே தமிழக அரசு இந்த பருவ நிலை மாற்றத்திற்காக தமிழக அரசு, கடன் தள்ளுபடி அல்லது நிவாரணம் என்று ஏதாவது செய்து கொடுத்து விவசாயிகளுக்கு உதவ வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போல, கம்பு, துவரை, உளுந்து ஆகியவற்றினை சாகுபடி செய்திருக்கும் விவசாயிகள், காட்டுக்கம்பு சாகுபடியில் பருவமழையால் கருகிபோய் விட்டதாலும், இதனால் கம்பு விளைச்சல் மிகுந்த அளவில் குறைந்து விட்டதாகவும், இந்த காட்டுக்கம்புகளை வளர்ப்பதினால், எந்த வித லாபமும் தற்போது இல்லை, மேலும், இந்த பயிர்களை ஆடு, மாடுகள் சாப்பிடாது ஏனென்றால், இதற்கு மேல் இந்த கம்புகளும் விளைச்சல் கிடைக்காது., ஒரு ஏக்கருக்கு ரூ 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை அறுவடை கூலி இல்லாமல் செலவு ஆவதோடு, அறுவடை செலவுடன் சேர்த்தால் ரூ 12 ஆயிரம் வரை செலவு ஆவதோடு, சோளத்தட்டை, கம்பு தட்டைகளும் விசுவு ரூ 750 வரை விற்பனை போனது தற்போது, ரூ 150 க்கு கூட விற்பனைக்கு விற்காத அவலநிலை தற்போது தொடர்கின்றது.

ஆகவே தமிழக அரசு, உடனடியாக நடவடிக்கை எடுத்து பருவநிலை மாற்றத்தில் சேதமடைந்த கருகிய விவசாயப்பயிர்களுக்கு பயிர்காப்பீடு திட்டத்தில் நிவாரணம் அல்லது மானியம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் தமிழக அரசு உடனடியாக பயிர்காப்பீடு திட்டத்தின் மூலம் இழப்பீடு வழங்கிட வேண்டுமென்றும் இதே பகுதியை சார்ந்த அன்பரசன் கூறியதோடு, தற்போது விவசாய வேலைகளுக்கு கூலிக்கு ஆள்கள் இல்லாமல் தவித்து வருவதாகவும் அனைவரும் தற்போது ரூ 300 ஆள்கூலிக்கு கொடுத்தால் கூட யாரும் வரவில்லை என்றும், ஏனென்றால் 100 நாள் வேலை திட்டத்திற்கு ஆள்கள் செல்வதால் விவசாயமே கேள்விக்குறியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, மத்திய மாநில அரசுகள் இந்த பருவ நிலை மாறுதலுக்கு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த பனி மற்றும் தொடர்மழை காரணமாக இந்த கருகும் பயிர்களுக்கு தகுந்த இழப்பீட்டினை வழங்க வேண்டுமென்றும் அனைத்து விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.