1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Stranger watches Bedroom window in Coimbatore

மிட்நைட்டில் பெட் ரூமை நோட்டம் விடும் மர்ம ஆசாமி: பீதியில் தெருவாசிகள்!

கோவை
கோவை பகுதியில் மர்ம ஆசாமி ஒருவர் நள்ளிரவில் வீட்டின் பெட் ரூமை நோட்டமிடுவது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
 
பைக்கில் மக்களின் குடியிருப்பு பகுதிக்கு ஊர் அடங்கிய பிறகு வரும் இந்த நபர், செருப்பையும் ஜெர்கினையும் பைக்கிலேயே கழற்றி வைத்துவிட்டு வீட்டின் சுவரை ஏறி குதித்து பெட்ரூம் ஜன்னல்களை நோட்டம் விடுகிறார். இது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. 
 
கோவையின் பூம்புகார் நகர், குறிஞ்சி நகர், முல்லை நகர், கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் அந்த நபர் சுற்றி வருகின்றான் என்பதும் தெரியவந்துள்ளது. 
 
வீட்டின் பெட் ரூமை மட்டுமே நோட்டமிடும் அவன் எந்தப் பொருளையும் திருடவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை நடைபெற்று வருவதாக தெரிகிறது. ஆனால், அவனின் நோக்கம் என்னவென்றே தெரியவில்லை.
அடுத்த கட்டுரையில்
சென்னை புத்தகக் கண்காட்சியில் பலருக்கு கடைகள் ஒதுக்கப்படாதது ஏன்?