ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 22 பிப்ரவரி 2024 (08:07 IST)

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை  நடைபெறவுள்ளது. ஸ்டெர்லைட் தரப்பு, தமிழக அரசு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் அடுத்தகட்ட விசாரணை நடைபெறவுள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது.
 
முன்னதாக தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில் இந்த ஆலை அமைந்துள்ள பகுதிகளில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக பல்வேறு அமைப்பினர் குற்றஞ்சாட்டினர்.
 
கடந்த 2018ம் ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தின்போது, ஏற்பட்ட வன்முறையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
 
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை உத்தரவை நீக்கி, மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மனு கடந்த சில மாதங்களாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருவதால் இன்றைய விசாரணையில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
 
Edited by Siva