அமெரிக்காவில் துப்பாக்கி சூடு! 8 பேரை கொன்ற சைக்கோ கொலைகாரன்.!!
அமெரிக்காவில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடுகள் சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், சிகாகோ அடுத்த ஜாய்லாட் பகுதியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். தொடர்ந்து அதே பகுதியில் இரண்டு வீடுகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.
இரண்டு நாட்களில் அடுத்தடுத்து இரு வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மொத்தம் 8 பேர் கொல்லப்பட்ட நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ரோமியோ நான்சே என்றும் என்ன காரணத்திற்காக அவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மேலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு, அத்தியாவசிய பணிகள் தவிர்த்து வெளியே வர வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
டெக்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதும், தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.