வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 25 ஜூன் 2019 (17:04 IST)

தமிழகத்தில் ஜூலை 18 -ல் மாநிலங்களவைத் தேர்தல் ; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சமீபத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் - மே ஆகிய மாதங்களில் 7 கட்டங்களாக நடந்து முடிந்தன. இதில் மோடி தலைமையிலான பாஜக 300 க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாம் முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் தற்போது மக்களவையில் பாரளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  இராஜ்யசபாவுக்கு எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் குறித்து தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
அதில்,மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூலை 16ல் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் - அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் வெளியகும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் தமிழகத்தில் உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு  ஜூலை 18 ஆம்தேதி தேர்தல் நய்டைபெற உள்ளது.
 
வேட்பு மனுதாக்கல் செய்ய ஜூலை 1 முதல் 8 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ள்து. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா, மைத்ரேயன், கே.பி. அர்ஜூனன், டி,ராஜா கனிமொழி, ஆர் லட்சுமணன்  பதவிக்காலமும் ஜூலை 24 ல் முடிவடைகிறது. தமிழகத்தின்  சார்பில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களையும், திமுக சார்பில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களையும் தேர்வு செய்ய இயலும் என்று தெரிகிறது.
 
ஒரு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.