1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Stalin tweet about Mohmad john MP dead

அதிமுக எம்பி மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்!

முகமது ஜான்

தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த அதிமுக எம்பி முகமது ஜான் அவர்கள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என்ற செய்தியை சற்று முன் பார்த்தோம் 

 
இந்த நிலையில் அதிமுக எம்பி மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: அதிமுக எம்பி முகமது ஜான் திடீரென மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன், ஆழ்ந்த இரங்கல்.
 
மாநிலங்களவையில் தமிழகத்தின் குரலாக ஒலித்தவர் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் அதிமுகவினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் ஆறுதல்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார் 
 
அதிமுக எம்பி ஆக இருந்த அரசியல் நாகரீகம் கருதி முகமது ஜான் மறைவு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளது பாராட்டும் வகையில் உள்ளது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
தேர்தலுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு