வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 14 மே 2021 (08:46 IST)

கதறி அழுத சீமானுக்கு ஆறுதல் சொன்ன ஸ்டாலின்!

தந்தையை இழந்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

திரைப்பட இயக்குனர், விடுதலை புலிகள் ஆதரவாளர், தமிழ் தேசிய ஆதரவாளர் என பலவாறாக அறியப்பட்ட சீமான் 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் எனும் கட்சியை தொடங்கினார். 2016 தேர்தலில் இருந்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வருகிறார். இன்றைய நிலவரப்படி திமுக, அதிமுகவுக்குப் பிறகு அதிக வாக்குகளை வாங்கியக் கட்சியாக நாம் தமிழர் இருக்கிறது. இந்நிலையில் சீமானின் தந்தை செந்தமிழன் அவர்கள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.

சொந்த ஊரில் அவரின் இறுதி சடங்குக்கான பணிகளில் இருந்த சீமானுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அழைத்து ஆறுதல் தெரிவித்துள்ளார். ஸ்டாலினுடனான உரையாடலின் போது சீமான் தந்தையை இழந்த சோகத்தில் கதறி அழுதது காண்போரை நெஞ்சுருக செய்தது.