1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 மே 2021 (16:42 IST)

சீமானின் தந்தை மறைவு…. முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன் இரங்கல்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு கமல் இரங்கல் டுவீட் பதிவிட்டுள்ளார்.
 


திரைப்பட இயக்குனர்,நடிகர், பேச்சாளர் விடுதலை புலிகள் ஆதரவாளர், தமிழ் தேசிய ஆதரவாளர் என பன்முகங்களைக் கொண்டவர் சீமான். இவர் கடந்த 2010 ஆம். ஆண்டு நாம் தமிழர் எனும் கட்சியை தொடங்கினார். 2016 தேர்தலில் இருந்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வருகிறார். இன்றைய நிலவரப்படி திமுக, அதிமுகவுக்குப் பிறகு அதிக வாக்குகளை வாங்கியக் கட்சியாக நாம் தமிழர் இருக்கிறது.

 
இந்நிலையில் இன்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள் இயற்கை எய்தினார்.  இவரது மறைவுக்கு திரைப்பட நடிகர், நடிகைகள்,அரசியல் பிரபலங்கள்,கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை மறைந்த செய்தி வேதனை அளிப்பதாக உள்ளது. தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் சீமானுக்கும், அவரது குடும்பதார்க்கும் எனது ஆறுதல்கள் எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், நண்பர்
@SeemanOfficial
இழப்புக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் எனத் தெரிவித்துள்ளார்.


கமல் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியபோது, சீமானை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்துப் பெற்றது குறிப்பிடத்தக்கது.