தொடர்புடைய செய்திகள்
- வாஸ்து முறைப்படி தியானம் செய்ய சிறந்த இடம்
- காமன்வெல்த் போட்டி - தங்கவேட்டையில் இந்தியா; 6 தங்கங்களுடன் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறித்தி திரைத்துறையினர் அறவழிப் போராட்டம்
- கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்
- டாஸ் வென்ற சிஎஸ்கே பீல்டிங் செய்ய முடிவு
2வது நாளாக நடைபயணம்: விடாமல் போராடும் செயல் தலைவர்!
தமிழகத்தில் காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் எனவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போராட்டங்களின் ஒரு பகுதியாக காவிரி மீட்பு உரிமை நடைபயணத்தை திருச்சியில் உள்ள முக்கொம்பில் நேற்று ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் இன்று, தஞ்சாவூரில் 2 ஆவது நாளாக காவிரி உரிமை மீட்பு நடைபயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கினார். பட்டுக்கோட்டை, மன்னார்குடி, வாண்டையர் குடியிருப்பு வரை இன்று நடைபயணம் மேற்கொள்கிறார்.
ஆறு நாட்கள் நடைபெறும் இந்த பயணத்தின் போது விவசாயிகளை ஸ்டாலின் உள்ளிட்டோர் சந்திக்கின்றனர். இந்த பயணம் கடலூரில் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
