வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 20 மார்ச் 2019 (21:04 IST)

ஆட்சிக்கு வந்ததும் முதலில் சிறைக்கு அனுப்புவது இவரைத்தான்: ஸ்டாலின் ஆவேசம்

பாராளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் வருவதால் இந்த இடைத்தேர்தலின் முடிவு தமிழக ஆட்சியையே மாற்றும் வல்லமை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றால், முக ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர். எனவே பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தலிலும் வெற்றி பெறுவதே திமுகவின் இலக்காக உள்ளது
 
இந்த நிலையில் இன்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'அதிமுக ஆட்சியில் கொள்ளை, கொலை, லஞ்சம், ஊழல் தான் நடந்து வருகிறது என்றும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் நீடிப்பதாகவும், திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து திமுக விசாரணை நடத்தும் என்றும், அவருடைய மரணத்திற்கு காரணமானவர்களை சிறையில் அடைப்பதே தனது முதல் பணி என்றும் ஆவேசமாக பேசினார்
 
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரணை செய்து வரும் ஆறுமுகச்சாமி ஆணையத்தின் விசாரணை ஒரு முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஆட்சி மாறினால் அதிரடியாக அனைத்திலும் மாற்றம் வரும் என்றும், ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களை திமுக ஆட்சி கண்டுபிடிக்கும் என்ற நம்பிக்கை அதிமுகவினர்களுக்கே ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது