1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Stalin question about 15 lakhs deposit

15 லட்சத்தை எப்போது தருவீங்க மோடி: ஸ்டாலின் அதிரடி கேள்வி!

15 லட்சத்தை எப்போது தருவீங்க மோடி: ஸ்டாலின் அதிரடி கேள்வி!

மோடி
இந்திய பிரதமர் மோடி 500, 1000 நோட்டுகள் இன்று முதல் செல்லாது எனவும் அதனை வங்கிகளில் கொடுத்து புதிய 500 மற்றும் 2000 நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என நேற்று இரவு அறிவித்தார். பிரதமர் அறிவித்த அடுத்த நிமிடமே நாட்டில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.


 
 
கருப்பு பணத்தை ஒழிக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோடி கூறினார். பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சியினர் பிரதமர் மோடியின் இந்த  நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர். அதே நேரத்தில் இதற்கு எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.
 
இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறும் பிரதமர் மோடி பொது மக்கள் வங்கி கணக்கில் ரூபாய் 15 லட்சத்தை எப்போது டெபாசிட் செய்வார் என கேள்வி எழுப்பினார்.
 
கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி தனது தேர்தல் பரப்புரையின் போது கருப்பு பணத்தை ஒழித்து நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
கருத்து கணிப்பை பொய்யாக்கி அதிபரானார் டிரம்ப்!!