திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 22 மே 2018 (08:06 IST)

ஸ்டாலின் கூட்டும் அனைத்து கட்சி கூட்டம்: கமல் கட்சிக்கு அழைப்பு உண்டா?

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சிகள் கூட்டத்தை கூட்டுகிறார். இந்த கூட்டத்தில் திமுக ஆதரவு கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட, ஒன்பது கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 
திமுகவின் மற்ற ஆதரவு கட்சிகளான  மக்கள் தேசிய கட்சி, இந்திய சமூக நீதி இயக்கம், விவசாயிகள் தொழிலாளர் கட்சி, பெருந்தலைவர் காமராஜர் மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், உழவர்உழைப்பாளர் கட்சி, அகில இந்தியபார்வர்டு பிளாக், ஆதித் தமிழர் பேரவை, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம், தமிழ் மாநில தேசிய லீக், தேசிய லீக், வல்லரசு பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதால் இந்த கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில் சமீபத்தில் காவிரி விவகராத்திற்காக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பிலும் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ளாத நிலையில் திமுக இன்று கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள கமல் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது.
 
இந்த நிலையில் இன்றைய அனைத்து கட்சி கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் இயற்றப்படவுள்ளன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்