வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 16 மே 2018 (13:11 IST)

திமுகவில் புகைச்சல்: அவசரப்பட்டு சிக்கிக்கொண்ட ஸ்டாலின்!

கர்நாடக தேர்தல் விவகாரம் நேற்றில் இருந்து பரபரப்பு குறையாமல் உள்ளது. இதில் திமுக செய்ல தலைவர் தெளிவான ஆட்சி யாருக்கு என்ற நிலை முடிவாவதற்குள் அவசரபட்டு வாழ்த்து தெரிவித்துவிட்டார். 
 
ஸ்டாலின் வாழ்த்து சொல்லியது தற்போது அந்த கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாஜகவை தீண்டதகாத கட்சியாக பார்க்கிறது ஆனால், இது போன்று இலைமறைவு ஆதரவுகளையும் அளிக்கிறது என்று அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
 
அண்மைக்காலமாக காங்கிரஸை கழற்றிவிட முயற்சிக்கிறது திமுக என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே போல் மத்திய பாஜக அரசும் இதுவரை திமுகவை சீண்டாமல்தான் இருந்து வருகிறது. 
 
இவ்வாறு இருக்கையில், 3 வது அணி முயற்சியில் திமுக இறங்கினால், ஆனால் இது பாஜகவுக்கு சாதகமான முடிவு என இடதுசாரிகள் விமர்சித்தனர். 
 
கர்நாடக தேர்தலில் பாஜக ஆட்சி அமைத்தால், பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுகவினர் வாழ்த்து சொல்வது என்பது வேறு. ஆனால், ஸ்டாலின் வாழ்த்து சொல்வது திமுகவில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.