1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 21 மே 2018 (08:46 IST)

200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: தினகரன்

சமீபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் ஈரோட்டில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசினார்.
 
அப்போது அவர் 'அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்' இதுவரை தமிழகத்தில் எந்த கட்சியும் செய்ய சாதனையான 200 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைப்போம் என்று கூறினார். 
 
ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வெற்றி பெற்ற தினகரன், பொதுத்தேர்தலிலும் அதேபோன்ற வெற்றியை பெறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
ஏற்கனவே ரஜினியின் கட்சிக்கு 150 இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை கூறியுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தினகரன் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் தேமுதிக, சரத்குமார் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை தினகரனுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.