செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 21 ஜூலை 2020 (10:59 IST)

மின்கட்டண விவகாரம்: முக ஸ்டாலின், கனிமொழி போராட்டம்

மின்கட்டண விவகாரம்: முக ஸ்டாலின், கனிமொழி போராட்டம்
மின்கட்டண விவகாரத்தில் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஜூலை 21ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் இன்று காலை முதல் போராட்டம் தொடங்கியுள்ளது
 
திமுகவினர் தங்கள் வீடுகளின் முன்பு கறுப்புக்கொடி ஏற்றியும், கண்டன முழக்கங்களுடனும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மின்கட்டண குழப்பங்களை நீக்கவும், கட்டண சலுகை வழங்கவும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கறுப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார். அதேபோல் வேலூர் காட்பாடியில் துரைமுருகன் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார். திமுக எம்பி கனிமொழி தனது சென்னை வீட்டின் முன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் செய்தார். மின்கட்டண விவகாரம் குறித்து கனிமொழி எம்பி கூறியபோது, ‘மின்கட்டண விவகாரத்தில் திமுக குழப்பவும் இல்லை, அரசியலும் செய்யவில்லை என்றும், மின்கட்டணம் எவ்வளவு வந்திருக்கிறது என்று ஒவ்வொரு குடும்பத்துக்குமே தெரியும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் நெடுஞ்சாலை டெண்டருக்கு இப்போது என்ன அவசரம் வந்தது என எம்.பி.கேள்வி எழுப்பிய கனிமொழி எம்பி, யாருடைய ஆலோசனைகளையும் தமிழக அரசு செவிமடுப்பதில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.