1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Stalin fire on his political movement

பெரும்பான்மையை இழந்த அதிமுக; தீயாக வேலை செய்யும் ஸ்டாலின்

திமுக
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதை தொடர்ந்து அதிமுக சட்டசபையில் தனது பெரும்பான்மையை இழந்துள்ளது.


 

 
ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணியினர் இணைந்ததை அடுத்து தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் இன்று காலை ஆளுநரை சந்தித்து தனித்தனியே கடிதம் கொடுத்தனர். அதில் அவர்கள் எடப்பாடிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிமுக கட்சி சட்டசபையில் தனது பெரும்பான்மையை இழந்துள்ளது.
 
இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தார். அதில், தமிழக சட்டசபையில் எடப்படி அரசு உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரியுள்ளார்.
 
கடந்த முறை ஓபிஎஸ் அணியினர் தனியாக நின்றபோது ஓரம் நின்று வேடிக்கை பார்த்த எதிர்கட்சித் தலைவர் தற்போது தீயாக செயல்பட தொடங்கியுள்ளார்.
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
எடப்பாடி, ஓபிஎஸ்-ஐ வாழ விட மாட்டோம் - புகழேந்தி சூளுரை