புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 13 மே 2019 (11:27 IST)

ஸ்டாலின் - தினகரன் சீக்ரெட் டீலிங்..? அம்பலப்படுத்திய எடப்பாடியார்!!

டிடிவி தினகரன் திமுகவுடன் ரகசிய உடன்படிக்கை வைத்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் பேசியுள்ளார். 
 
நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். 
 
அந்த பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி டிடிவி தினகரனை பற்றிய விமர்சனக்களை முன்வைத்தார். அவர் பேசியதவது, அதிமுகதான் தினகரனுக்கு பதவி கொடுத்தது. அம்மாவின் இந்த இயக்கம் அவருக்கு விலாசத்தை கொடுத்தது. இந்த இரட்டை இலை சின்னம்தான் அவருக்கு அடையாளத்தை கொடுத்தது. நாட்டு மக்களுக்கு அவரை அடையாளம் காட்டியது.
ஆனால், அவரோ அந்த இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என வழக்கு போட்டுள்ளார். திமுக ஒரு தீயசக்தி அதை நாட்டை விட்டே விரட்ட வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட இயக்கத்துடன் கூட்டணி வைத்து தினகரன் செயல்படுகிறார். 
 
மக்களுக்காக உருவாக்கப்பட்ட அதிமுக இயக்கத்தை அழிக்க வேண்டும், அதுவும் எதிரியோடு சேர்ந்து அழிக்க வேண்டும் என தினகரன் எண்ணுவது துரோக செயல் அல்லவா? இவர்களுக்கு மக்கள் தேர்தலின் வாயிலாக பாடம் புகட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.