முதல்வர் பழனிசாமிக்கு பிறந்த நாள் : தமிழிசை வாழ்த்து

edapadiyar tamilsai
Last Modified ஞாயிறு, 12 மே 2019 (16:34 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 65 - வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அமைச்சர்கள், அரசியல் பிரபலங்கள்,தலைவர்கள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வருக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவிட்டுள்ளார்.
 
அவர் தெரிவித்துள்ளதாவது:

’’சாமானிய மக்களின் தொண்டராக தன்  அரசியல் வாழ்க்கையை தொடங்கி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் வழியில் சாமானிய மக்களுக்கான  திட்டங்களை  நிறைவேற்றி ஏழை,எளிய மக்களின் கனவுகளை நனவாக்கி வரும்  தமிழக முதல்வர் 
 
அண்ணன் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.தாங்கள்  நீண்ட ஆயுளுடன்,உடல் நலத்துடன் மக்கள் சேவையாற்ற இறைவனை பிராத்திக்கின்றேன்.இந்த தேர்தல் வெற்றியோடு இன்னும்  பல வெற்றிகளை பெற்று மக்கள் தொண்டாற்ற வாழ்த்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்.
 
 இதில் மேலும் படிக்கவும் :