வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (21:06 IST)

புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

tuticorn
தூத்துக்குடி திருவைகுளம்  புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன்  நேற்று நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு மாலை  6 மணிக்கு திருப்பவனி நடந்தது. இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட  பிஷப் ஸ்டீபன்  அந்தோணி கொடியேற்றம் மற்றும் நவநாள் திருப்பலி நடந்தது. இதில், திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர்.

வரும் 12 ஆம் தேதி காலை 5: 45 மணிக்கு திருப்பலி, மாலை 6:30 மணிக்கு  திருப்பலி, மாலை 6:30 மணிக்கு  கோடி அற்புதரின் சப்பர  பவனி, தொடர்ந்து சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 13 ஆம் தேதி காலை 5:45 மணிக்கு திருவிழா நிறைவு நற்கருணை ஆசீரும் நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.