வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 1 மே 2023 (23:50 IST)

நெய்தல் கலை திருவிழாவின் வெற்றிக்கு முதல் காரணம் மக்கள்தான் - கனிமொழி

neiithal kalai
நெய்தல் கலை திருவிழாவின் வெற்றிக்கு முதல் காரணம் மக்கள்தான் - நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
 
தூத்துக்குடி (எட்டயபுரம் சாலை) சங்கரப்பேரி சாலை பிரிவு அருகில் உள்ள மைதானத்தில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற நெய்தல் கலை விழாவின் நிறைவு நாளில் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் பேசியதாவது: 
 
நெய்தல் கலை விழா சிறப்பாக நடைபெற முதல் காரணம் தூத்துக்குடி மக்கள் தான். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்த கலைஞர்கள் மற்றும் உணவுக்கடை மக்களுக்கும் நன்றிகள். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஒருங்கிணைந்த மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் நன்கொடையாளர்களுக்கும்  காவல்துறை அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் நன்றி என்று கூறினார்.
 
நெய்தல் கலை விழா 28 ஏப்ரல் தொடங்கி மே 1ஆம் தேதி வரை 4 நாட்கள் நடந்தது. இந்த நெய்தல் கலை விழாவில், 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.
 
இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்ந்தது மேலும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை காண வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் நடனமாடி அனைவரையும் கவர்ந்தனர். மேலும் கலைத்திருவிழாவில் கலைகள் மட்டுமின்றி நமது பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்துகொள்ளும் வகையில், 40 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவில் தமிழகத்தில் பல்வேறு மாவட்ட உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு பொதுமக்கள் விரும்பி வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.இதை மிகவும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் பாரம்பரிய உணவுகளையும் மிகவும் தங்களைக் கவர்ந்ததாக இளைய தலைமுறை என தெரிவித்தனர்.
 
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
இறுதி நாளான இன்று (01/05/2023) இசை நிகழ்ச்சி விவரம்:
 
தூத்துக்குடி இசைக் கல்லூரி, சுப்பையா கலைக்குழு - ஜிம்பளாமேளம், சமர் கலைக்குழு - பறையாட்டம், திருவாரூர் எஸ்.எஹ்.சுஜித் கலைக்குழு, காரமடை கலைக்குழு - துடும்பாட்டம் வி.எம். மெல்லிசைக் குழு.