1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: திங்கள், 24 ஏப்ரல் 2023 (22:19 IST)

ஐயாறப்பர் கோவிலில் சித்திரை விழா நாளை கொடியேற்றம்

thanjavur
தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் சித்திரை விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.

தஞ்சாவூர்  மாவட்டம் திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில்  ஒவ்வொரு ஆண்டும் சித்திரை விழா சிறப்பாக நடைபெறும்.

இந்த நிலையில், இந்த ஆண்டிற்காக சித்திரைவிழா வரும் மே மாதம் 7 முதல் 13  நாட்கள் நடைபெறவுள்ளது.

பின்னர்,  29 ஆம் தேதி தன்னைத்தான பூஜித்தல் நிகழ்ச்சியும்,  6 ய ஊர்களில் இருந்து சாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன்பு சைவர்ககளுக்கு மகேஷ்வரபூஜை  நடக்கும், பின்னர், 3 ஆம் தேதி தேரோட்டம் நடக்கும்.

இதையடுத்து, சப்தஸ்தான பெருவிழா 6 ஆம் தேதி நடக்கிறது.  அதிகாலை 5 மணிக்கு ஐயாறப்பர் அறம் வளர்ந்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கில் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்களுக்குச் சென்று இரவு காவிரி ஆற்றில்   உர் பல்லக்குகளும் தில்லையில் சங்கமிக்கவுள்ளது.

வரும் 7 ஆம்தேதி பூப்போடும் நிகழ்ச்சியும், நடக்கவுள்ளதாக கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.