வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (22:27 IST)

பிரமோற்சவம்: சனீஸ்வரர் கோயிலில் வரும் மே 16 ஆம் தேதி கொடியேற்றம்

காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாற்றில்  உள்ள சனீஸ்வரர்  கோயிலில் வரும்  மே 16 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறவுள்ளது.

காரைக்கால் பகுதியை அடுத்துள்ள திருநள்ளாற்றில்  பிரசித்தி எற்ற சனீஸ்வர் கோவில் உள்ளது. இக்கோயிலில் சனிக்கிழமை அன்று ஆயிரக்கணக்கான  பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா 18  நாட்கள் நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு பிரமோற்சவ விழா நேற்று பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில், கொடிகம்ப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் ஆராதனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்  கோவில் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். வரும் மே 30 ஆம் தேதி தேரரோட்ட நிகழ்ச்சியும்,  31 ஆம் தேதி திருவீதி உலா நிகழ்ச்சியும், ஜூன் 1 ஆம் தேதி தெப்ப உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.