புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 மே 2023 (20:56 IST)

ஜலதோஷத்திற்கு ஆவிபிடித்த நர்ஷிங் மாணவி உயிரிழப்பு

ஆத்தூர் அருகே ஜலதோஷத்துக்கு ஆவி பிடித்தபோது, நர்ஷிங் மாணவி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே மேலசேர்ந்த பூமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மோதி நாயகம். இவர், சாகுபுரத்தி உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

இவர் மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் கவுசல்யா( 18). இவர் அங்குள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

சில நாட்களுக்கு முன் இவருக்கு ஜலதோஷம் பிடித்துள்ளது. இதற்கு மாத்தீரை எடுப்பதைவிட, ஆவிபிடித்தால் சளி வெளியேறும் என நினைத்து,  ஒரு பெரியபாத்திரத்தில் தைலம் போட்டு, வீட்டின் ஹாலில் வைத்து, காற்று புகாதவாறு பெட்ஷீட்டை போட்டு மூடி,கவுசல்யா ஆவிபிடித்துள்ளார்.

அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த வெந்நீர் பாத்திரத்திலேயே விழுந்து கிடந்துள்ளார்.

பெட்ஷீட்டை விலக்கி பார்த்தபோது கவுசல்யா அசைவற்றுக் கிடந்துள்ளார். அதன்பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.