வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 மே 2022 (19:04 IST)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றி

mahinda
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார். 
 
*இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்ததற்கு நன்றி தெரிவித்து இலங்கை பிரதமர் கடிதம் எழுதியுள்ளார்.
 
இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்காமல், மனிதாபிமான அடிப்படையில் உதவியதற்கு நன்றி எனவும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 
தமிழக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இலங்கை மக்கள் சார்பாக நன்றி  இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே எழுதிய கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.