வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 5 மே 2022 (11:52 IST)

இலங்கை மக்களுக்கு உதவி: ஒரு மாத ஊதியத்தை வழங்கும் திமுக எம்பிக்கள்!

anna arivalayam
இலங்கை மக்களுக்கு உதவி செய்ய ஒரு மாத ஊதியத்தை திமுக எம்பிக்கள் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இலங்கை மக்களுக்கு தாராளமாக உதவி செய்ய வேண்டும் என முதலமைச்சர் சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். அதுமட்டுமின்றி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திமுக ஒரு கோடி ரூபாய் கொடுத்து உள்ளது என்பதும் திமுக எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு உதவ முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் ஒரு மாத ஊதியத்தை திமுக எம்பிக்கள் வழங்குவார்கள் என திமுக தலைமை அறிவித்துள்ளது