1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (08:50 IST)

வெளிநாடுகளில் இருந்து தரமற்ற அரிசி இறக்குமதி! – இலங்கை அரசு வேதனை!

Kichili Samba Rice
இலங்கை சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து வந்த நிலையில் தரமற்ற அரிசியை பிற நாடுகள் வழங்கியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களையே பயன்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உத்தரவிட்ட நிலையில், இலங்கையில் விவசாயம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.

தற்போது புதிய அமைச்சரவரை அமைந்துள்ள நிலையில் விவசாயத்தை மீட்கவும், அதுவரை அரிசி உள்ளிட்டவற்றை பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய இலங்கை வேளாண் துறை அமைச்சர் “சில கட்சிகளின் சாத்தியமில்லாத ஆலோசனைப்படி, இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க முயன்றதவ் விளைவு, தற்போது அரிசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியிலும் சுமார் 6 லட்சம் டன் தரமற்ற அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது” என வேதனை தெரிவித்துள்ளார்.