1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 30 ஏப்ரல் 2018 (18:11 IST)

பலத்த எதிர்ப்பு எதிரொலி: தஞ்சையில் இருந்து கிளம்பிய மத்திய அதிரடிப்படையினர்

தஞ்சை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும் அரசியல் கட்சியினர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை கண்டுகொள்ளாத மத்திய அரசு டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் பணியில் மும்முரமாக இருந்தது.
 
இந்த நிலையில் மீத்தேனுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்த அரசியல் கட்சிகளும் அந்த பகுதி மக்களும் தயாராகி வந்த நிலையில் திடீரென நேற்று மத்திய அதிரடி படையினர் டெல்டா மாவட்டங்களில் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
மத்திய அதிவிரைவு படையினர் போராட்டத்தை அடக்க குவிக்கப்படவில்லை என்றும் இதுவொரு சாதாரண நிகழ்வு என்று விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும் இதற்கு அரசியல் கட்சிகள் கடும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சற்றுமுன்னர் தஞ்சையில் முகாமிட்டிருந்த அதிவிரைவுப் படையினர் முகாமை காலி செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.