வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 18 ஏப்ரல் 2018 (12:39 IST)

வரதட்சணைக்காக கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

தஞ்சையில் வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மானம்புசாவடி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்(30). இவரது மனைவி காயத்திரி (23). காயத்ரி கர்ப்பமாக இருந்துள்ளார்
 
சுந்தரம் காயத்ரி வீட்டாரிடம் இருசக்கர வாகனம் வாங்கித் தரக் கோரியும், புதிதாக வீடு கட்ட பணம் வாங்கி வரும்படியும் காயத்ரியிடம் கேட்டுள்ளார். இதனால் சுந்தரத்திற்கும் காயத்திரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் நேற்று இரவு சுந்தரத்துக்கும் - காயத்திரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுந்தரம் காயத்ரியை தாக்கியுள்ளார். படுகாயமடைந்த காயத்ரி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து சுந்தரத்தை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.