வியாழன், 3 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2024 (16:46 IST)

இன்றிரவு சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் இன்று இரவு மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது என்பதும் விடிய விடிய தூறல் விழுந்து கொண்டு இருந்தது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஏற்கனவே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதை அடுத்து தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva