1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (11:25 IST)

பில்டப் தேவையில்லை, வெளியே போகலாம்: பாஜக எம்.எல்.ஏக்களுக்கு அப்பாவு அறிவுரை

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் இன்று நீட் விலக்கு மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர்
 
அப்போது சபாநாயகர் அப்பா சட்டசபையில் இருந்து வெளியே போவதற்கு இவ்வளவு பில்டப் தேவையில்லை, வெளியே போக நினைத்தால் போய் விடுங்கள் என கூறினார். 
சட்டப்பேரவையில் இன்று நீட் விலக்கு மசோதா விவாதம் நடந்த போது குறுக்கிட்டுப் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்
 
அப்போது பில்டப் எல்லாம் வேண்டாம் வெளியே போக நினைத்தால் தாராளமாக போய் விடுங்கள் என எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தியுள்ளார்.