தொடர்புடைய செய்திகள்
- ரஜினியின் இந்தப் படத்தை ’’ரீமேக் ’’செய்ய ஆசைப்பட்ட அஜித்
- ரஜினிகாந்த் மாதிரி எல்லாரும் முன்வரணும்! – பாஜக தலைவர் எல்.முருகன் பாராட்டு!
- கேளம்பாக்கம் செல்ல ரஜினி இ-பாஸ் வாங்கினாரா? சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்
- கேளம்பாக்கம் பயணம், கபாலி, அரோகரா! – முப்பெரும் ட்ரெண்டிங்கில் ரஜினி!
- கந்தனுக்கு அரோகரா!!! ரஜினியால் ஓங்கி ஒலிக்கும் கந்தனின் பெயர்!
ரஜினிகாந்துக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றி
கந்தசஷ்டி கவசம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த கருப்பர் கூட்டம் குழுவினர் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ஒரு டுவிட்டை பதிவு செய்தார் என்பதும், அந்த டுவீட் மிகப்பெரிய வைரலானது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ரஜினியின் பாராட்டுக்கு தமிழக அமைச்சர் எஸ்பி வேலுமணி அவர்கள் தனது டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான தமிழக அரசு சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் யாராயினும் அரசியல் செய்யாமல் உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கு அமைதியை நிலைநாட்டி வருகிறது.
அவ்வகையில் கவசமாக இருந்து காக்க என்று கந்தர் அருள்வேண்டி கோடிக்கணக்கான தமிழர்கள் பாடும் பாடலை நிந்தனை செய்தோர் மீதும் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க முயன்றோர் மீதும் மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான அரசு. உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டு தெரிவித்து பாகுபாடு இல்லா சமய நல்லிணக்கத்திற்கு குரல் கொடுத்துள்ள திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
