வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 22 ஜூலை 2020 (13:35 IST)

கேளம்பாக்கம் பயணம், கபாலி, அரோகரா! – முப்பெரும் ட்ரெண்டிங்கில் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்று வந்தது குறித்த ஹேஷ்டேகுகள் ட்ரெண்டான நிலையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளுக்காகவும் ரஜினி ட்ரெண்ட் ஆகி வருகிறார்.

நேற்று நடிகர் ரஜினிகாந்த் தனது லம்போர்கினி காரை ஓட்டி சென்றது வைரலான நிலையில், இன்று காலை அவரது கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் வாக்கிங் சென்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. இந்நிலையில் அவர் இ-பாஸ் பெற்றுக் கொண்டுதான் கேளம்பாக்கம் சென்றாரா என்ற கேள்விகள் எழுந்த நிலையில் ரஜினிக்கு ஆதரவாக #Rajnikanth என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் கந்தசஷ்டி விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை பாராட்டி ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் செய்தி பகிர்ந்து #கந்தனுக்கு_அரோகரா என்ற ஹேஷ்டேகை பதிந்தார். அதை தொடர்ந்து ட்விட்டரில் #கந்தனுக்கு_அரோகரா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

இந்த நிலையில் இன்றுடன் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் வெளியாகி 4 வருடங்கள் நிறைவடைகிறது. அதனால் #4YearsOfKabali #Thalaivar போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன. இதனால் ஒரே நாளில் ரஜினி குறித்த மூன்று வெவ்வேறு விஷயங்களுக்கான ஹேஷ்டேகுகள் ட்ரெண்டிங்கில் உள்ளது.