ரயிலில் சார்ஜ் செய்ய புதிய கட்டுப்பாடுகள்!.. காரணம் இதுதான்!..
தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது.. ஆனால், எங்கேயேனும் பணிக்கும்போது சார்ஜ் போட முடிவதில்லை. பேருந்தில் பயணிக்கும் போது சார்ஜ் போட முடியாத நிலையும் இருக்கிறது. அதனால்தான் பலரும் பவர்பேங்க்-ஐ பயன்படுத்துகிறார்கள்.
அதையும் மீறி பேருந்துகளில் சார்ஜ் போட முடியவில்லை என்றாலும் ரயில்களில் சார்ஜ் போடும் வசதிகள் இருக்கிறது. ஆனால் அதுவே தற்போது பிரச்சனையாக மாறியிருக்கிறது.. சமீபத்தில் ரயில் பயணி ஒருவர் அவரின் பவர்பங்கை சார்ஜில் போட்டுவிட்டு தூங்கி விட்டநிலையில் அது வெடித்து சிதறியது.
எனவே, பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி அனைத்து வகையான ரயில் பெட்டிகளிலும் இரவு 11 மணி வரை மட்டுமே செல்போன் சார்ஜ் செய்ய முடியும் என ரயில்வே துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. ரயில் பெட்டிகளில் சார்ஜிங் பாயிண்ட் மின் இணைப்பை இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை துண்டிக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.