சும்மா அடிச்சு வெளுக்க போகுது பருவமழை... வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி!!
வடக்கு வங்கக் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நல்ல மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழைக்கான காலம் நெருங்கியுள்ள நிலையில் ஆகஸ்டு 4 ஆம் தேதிக்குள் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் பட்சத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிகப்பட்டது.
இந்நிலையில் சற்றுமுன் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி வடக்கு வங்கக் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.