திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 ஜூலை 2020 (13:14 IST)

அலையடிக்கும் இது கடல் இல்ல; நம்ம புழல் ஏரி! – அலைகடலென காட்சியளிக்கும் வீடியோ!

சென்னையில் பெய்து வரும் தொடர்மழையான் புழல் ஏரி நிரம்பியுள்ள நிலையில் அதன் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட கடும் வறட்சியால் மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் பெரும் அவதிக்குள்ளாகினர். உலக அளவில் கவனம் பெற்ற இந்த வறட்சியின்போது சென்னையில் பல ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டன. ஆனால் தற்போது நல்ல மழை காரணமாக சென்னையில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

சென்னையின் பிரதான நீர்நிலையான புழல் ஏரியில் முழுக்க நீர் நிரம்பியுள்ள நிலையில் வீசும் காற்றில் ஏரியில் கடல் போல அலைகள் எழும்பி தரையில் மோதும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. தொடர்ந்து தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.