ஆதாரம் கிடைத்துவிட்டது: சூரப்பா விசாரணை ஆணைய தலைவர் தகவல்!

soorappa
ஆதாரம் கிடைத்துவிட்டது: சூரப்பா விசாரணை ஆணைய தலைவர் தகவல்!
siva| Last Updated: வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (16:18 IST)
சூரப்பா மீதான ஊழல் வழக்கை விசாரணை செய்துவரும் விசாரணை ஆணைய தலைவர் ஊழல் புகாருக்கு ஆதாரம் கிடைத்து விட்டது என தகவல் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது சமீபத்தில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் என்பவரது தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது

இந்த விசாரணை ஆணையம் கடந்த சில மாதங்களாக தீவிரமாக விசாரணை செய்து கொண்டிருக்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாருக்கு ஆதாரம் கிடைத்து விட்டது என்று விசாரணை ஆணைய தலைவர் கலையரசன் அவர்கள் கூறியுள்ளார். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சூரப்பா ஊழல் வழக்கு மீதான விசாரணைக்கு கடும் கண்டனம் தெரிவித்த கமல்ஹாசன் உள்ளிட்டோர் இந்த ஆதாரத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்


இதில் மேலும் படிக்கவும் :