1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (17:24 IST)

எம்.டெக் படிப்புகள் ரத்து இல்லை: அண்ணா பல்கலை தகவல்

எம்.டெக் படிப்புகள் ரத்து இல்லை: அண்ணா பல்கலை தகவல்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட எம்.டெக் படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 
 
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் எம்.டெக் பட்டப்படிப்புகள் ரத்து செய்யப்படும் என அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது 
 
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட எம்.டெக் படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது 
 
மேலும் மாநில அரசு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஒன்பது இடங்களை கூடுதலாக உருவாக்க வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. கூடுதல் இடங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விளக்கம் அளிக்க தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட எம்.டெக் படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது