1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. election commission order to transfer officers

நெருங்கும் தேர்தல்!.. தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!...

election
2021 சட்டமன்றத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கியிருக்கிறது. தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் என ஐந்து மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த திட்டமிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.

அனேகமாக ஏப்ரல் முதல் பாதியில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறலாம் என்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஏப்ரல் 13ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நயினார் நாகேந்திரனுடன் பனிப்போரா?!.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி!...