செவ்வாய், 20 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (22:09 IST)

பிப்.8ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்: அண்ணா பல்கலைக்கழகம்

பிப்.8ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்: அண்ணா பல்கலைக்கழகம்
பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளின் வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 
 
இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 15-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 
 
பிப்ரவரி 8ஆம் தேதி பி.ஈ, பிடெக், பி.ஆர்க், எம்.ஆர்க் ஆகிய வகுப்புகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 
 
மேலும் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது