வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (10:53 IST)

நீர்வீழ்ச்சியில் மூழ்கிய மகன்; உயிரைக் கொடுத்து காப்பாற்றிய தாய்! – கள்ளக்குறிச்சியில் சோகம்!

Death
கள்ளக்குறிச்சியில் நீர்வீழ்ச்சியில் மூழ்கிய மகனை காப்பாற்ற தாய் தனது உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பியில் உள்ள லக்கிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கவள்ளி. இவருக்கு கிஷோர் மற்றும் கிரண்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் பெய்த மழையால் கல்வராயன்மலை அடிவாரத்தில் நீர்வீழ்த்தி ஆர்பரித்துக் கொட்டியுள்ளது.

அதை காண மாணிக்கவள்ளி தனது தோழி ராதிகாவுடன் தனது மகன்களையும் கூட்டிக் கொண்டு சென்றுள்ளார். அங்கு நீர்வீழ்ச்சியில் நான்கு பேரும் குளித்துக் கொண்டிருந்தபோது மாணிக்கவள்ளியின் இளையமகன் கிரண்குமார் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் தத்தளித்துள்ளான்.

அதை கண்ட மாணிக்கவள்ளி சற்றும் யோசிக்காமல் பாய்ந்து சென்று மகனை தூக்கி பாறை அருகே நின்ற ராதிகாவிடம் கொடுத்துள்ளார். ஆனால் நீர் சுழலில் சிக்கிய மாணிக்கவள்ளி அடித்து செல்லப்பட்டு ஆழத்தில் மூழ்கி பரிதாபமாக பலியானார். மகனை தன் உயிரை கொடுத்து காப்பாற்றிய தாயின் செயல் அப்பகுதியில் ஆச்சர்யத்தையும், சோகத்தையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K’