ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2023 (14:59 IST)

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று தமிழகத்தில்  7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.