வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2023 (12:20 IST)

அண்ணியை அடைய ஆசை; இடையூறாக இருந்த குழந்தை! – கொன்று ஸ்பீக்கர் பாக்ஸில் வைத்த கொடூரம்!

Crime
கள்ளக்குறிச்சியில் ஸ்பீக்கர் பாக்ஸில் குழந்தை இறந்து கிடந்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.



கள்ளக்குறிச்சியில் உள்ள திருப்பாலப்பந்தல் பகுதியில் வசித்து வந்த குருமூர்த்தி – ஜெகதீஸ்வரி தம்பதியரின் 2 வயது ஆண் குழந்தை சமீபத்தில் காணாமல் போன நிலையில் அதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் வீட்டில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் தவறி விழுந்த போது அதில் குழந்தை இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தையை யார் கொன்று ஸ்பீக்கர் பாக்ஸில் வைத்தது என போலீஸார் வழக்குப்பதிவு செய்து குருமூர்த்தியின் உறவினர்களை விசாரிக்க தொடங்கினர்.

அப்போதுதான் குருமூர்த்தியின் தம்பி ராஜேஷ் தலைமறைவானது தெரிய வந்தது. அவர் தேடப்பட்டு வந்த நிலையில் அவராகவே வந்து சரணடைந்துள்ளார் ராஜேஷ். சரணடைந்த அவர் அளித்த வாக்குமூலம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராஜேஷ்க்கு தனது அண்ணன் குருமூர்த்தியின் மனைவியான ஜெகதீஸ்வரி மீது தவறான ஆசை இருந்துள்ளது. ஜெகதீஸ்வரி திருப்பாலப்பந்தலில் குழந்தையோடு வசித்து வரும் நிலையில் கணவர் குருமூர்த்தி பெங்களூரில் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.

அண்ணனுடன் பெங்களூரில் ஆட்டோ ஓட்டி வந்த ராஜேஷ் அடிக்கடி திருப்பாலப்பந்தல் சென்று வந்துள்ளார். அங்கு செல்லும்போதெல்லாம் தன் ஆசைக்கு இணங்கும்படி ஜெகதீஸ்வரியை தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். அவரது ஆசைக்கு ஜெகதீஸ்வரியின் 2 வயது குழந்தை இடையூறாக இருந்ததால் குழந்தையை கொன்று ஸ்பீக்கர் பாக்ஸில் போட்டுள்ளார் ராஜேஷ். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K