வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (16:28 IST)

#சுதந்திர தின விழா: மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு உதவிய' விஜய் மக்கள் இயக்கம்'

vijay makkal iyakkam
சுதந்திர தினத்தை முன்னிட்டு,  நடிகர் விஜய்யின் சொல்லுக்கிணங்க மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவி செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது மக்கள் இயக்கம் சார்பில் சமீபத்தில், கல்வி விழா மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இதையடுத்து, மாணவர்களுக்கு இலவச கல்வி இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மக்களுக்கு இலவச சட்ட மையம் ஆரம்பிக்கவுள்ளதாக  கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இவ்வியக்கத்தின் பொதுச்செயலாளார் புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார்.

 
இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு,  நடிகர் விஜய்யின் சொல்லுக்கிணங்க மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவி செய்துள்ளனர்.

இதுபற்றி புஸ்ஸி ஆனந்த் தன் டுவிட்டர் பக்கத்தில், ''தளபதி விஜய்   அவர்களின் சொல்லுக்கிணங்க,

#சுதந்திர தின விழாவை முன்னிட்டு.!

#விழுப்புரம் மாவட்ட விக்கிரவாண்டி ஒன்றிய கயத்தூர் கிளை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கயத்தூர் மந்தக்கரை பகுதியில்,

#தேசியக்கொடியினை ஏற்றி 100 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில், எழுது பொருட்கள், 150 மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் & டிபன் பாக்ஸ், தேர்வு அட்டை, 100 பெண்களுக்கு புடவை மற்றும் குடம், 100 நபர்களுக்கு வேட்டி, தூய்மை பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசி அடங்கிய தொகுப்பு மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.!

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர், மாவட்ட தலைவர், அணித் தலைவர்கள், விழுப்புரம் & கள்ளக்குறிச்சி மாவட்ட நகர, ஒன்றிய, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.! ''என்று தெரிவித்துள்ளார்.