1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 ஜூன் 2020 (09:27 IST)

நாளை கங்கண சூரிய கிரகணம்: அப்படினா என்ன தெரியுமா??

அரிய வானியல் நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிகழவுள்ளது. 
 
கங்கண சூரிய கிரகணம் என்றால் என்ன?
சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படும். இதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் போது அது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. 
 
சில நேரங்களில் நிலவால் மறைக்கப்பட்ட சூரியன் ஒரு வளையம் போல் வானில் காட்சி தரும். இது நெருப்பு வளைய சூரிய கிரகணம் அல்லது கங்கண சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.