செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 மே 2020 (08:17 IST)

வாக்கிங் சென்ற தமிழ் நடிகையின் அப்பாவிடம் வழிப்பறி: ஆவேச டுவீட் போட்ட நடிகை

வாக்கிங் சென்ற தமிழ் நடிகையின் அப்பாவிடம் வழிப்பறி
நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா நடித்த ’அன்பே ஆருயிரே’ என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை நிலா. இந்த படத்தை அடுத்து அவர் ஒரு சில தமிழ் படங்களிலும், இந்தி படங்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் தலை காட்டாமல் இருந்த நிலா தற்போது ஒரு சில இந்தி படங்களில் மட்டும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட இவரது நடிப்பில் ’செக்சன் 375’ என்ற படம் வெளியானது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நடிகை நிலாவின் தந்தை டெல்லியில் போலீஸ் காலனியில் வாழ்ந்து வருகிறார். அவர் இன்று அதிகாலை வாக்கிங் சென்றபோது திடீரென மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து அவரது செல்போனையும் பறித்து சென்றதாக தெரிகிறது. இது குறித்து நிலாவின் தந்தை டெல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் 
 
இந்த நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறிய நடிகை நிலா ’தலைநகரிலேயே எனது அப்பா வாக்கிங் சென்றபோது கத்தியை காட்டி மிரட்டி அவரது செல்போனை பறித்துள்ளனர் இதுதான் தலைநகரில் கிடைக்கும் பாதுகாப்பா? என்று அவர் குறிப்பிட்டு டெல்லி முதல்வருக்கு அந்த டுவீட்டை டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து நிலாவின் தந்தையிடம் வழிப்பறி செய்தது யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்த டெல்லி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தலைநகர் டெல்லியில் பிரபல நடிகை ஒருவரின் தந்தையிடமே வழிப்பறி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது