செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 15 ஜூன் 2020 (23:31 IST)

சூரிய கிரகணம்... முன் பதிவு செய்துவிட்டு வருமாறு தேவஸ்தானம் பக்தர்களுக்கு அறிவுரை !

வரும் 21 ஆம் தேதி காலை 10 மணி 18 நிமிஷம் முதல் மதியம் 1மணி 38 நிமிடம் வரை  சூரிய கிரகணம் நிகழ்கிறது.

இதனால் வரும் 21 ஆம் தேதி முதல் நள்ளிரவு  1 மணிக்கு கோயிகளின் நடைகள் அடைக்கப்பட்டு மதியம் 2:30 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் என திருமலை – திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் கூறியுள்ளார்.

மேலும்,  இந்த நிகழ்வு முடிந்தபின் தண்ணீரால் கோயிலை சுத்தம் செய்துவிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்கள் வரும்போது ஆன்லைனில் முன் பதிவு செய்துவிட்டு வருமாறு தேவஸ்தானம் அறிவித்துள்ளது.