1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated: சனி, 28 மார்ச் 2020 (10:37 IST)

நிலாவில் வீடு கட்டி வாழலாம்னு நினைச்சோம்... கொரோனா அட்வைஸ் கொடுத்த நடிகர் விஜய்!

கொரோனா விழிப்புணர்வு குறித்து வீடியோ வெளியிட்ட விஜய் ஆண்டனி

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பலவேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்ப்போது நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, வணக்கம் நண்பர்களே, நிலாவிற்கு நாம் ராக்கெட் விட்டோம். நிலவில் சென்று வாழலாம் என நினைத்தோம். செவ்வாய் கிரகத்தை சீக்கிரம் பிடித்துவிடலாம் என நினைத்தோம். மனுஷன் நினைத்தாள் என்னவேண்டுமானாலும் பண்ணலாம் மனுஷனுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது என நினைத்தோம். ஆனால் ஒரு வைரஸ் உலகத்தையே வீட்டில் உட்காரவைத்துவிட்டது என கூறி மக்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த வீடியோ..