1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Software Engineer speaks in Sarathkumar tone

திடீர் திடீரென பிரபலங்களுடன் பேசிய சரத்குமார்? திடுக்கிடும் தகவல்

சரத்குமார்
நடிகர் சரத்குமார் திடீர் திடீரென பிரபலங்களுடன் தொலைபேசியில் பேசியதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதெல்லாம் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரின் மோசடி என்பது தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் உள்ள பல பிரபலங்கள் சரத்குமாரிடம் இருந்து திடீர் திடீரென போன் அழைப்பு வந்ததை ஆச்சரியமாக பார்த்தனர். சரத்குமார் ஏன் தங்களுக்கு அடிக்க போன் செய்ய வேண்டும் என்று அவர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில் இதனை சரத்குமாரிடமே கேட்டு முடிவு செய்ய அவருக்கு போன் செய்து பேசினார். அப்போது தான் சரத்குமார் தான் யாரிடமும் பேசவில்லை என்றும் தனது குரலில் யாரோ மர்ம நபர் பேசி இருக்கிறார் என்பது தெரியவந்தது 
 
இதனை அடுத்து அந்த பிரபலங்களிடம் இருந்து மர்ம நபரின் செல்போன் எண்ணை வாங்கிய சரத்குமார் அந்த மர்ம நபரிடம் போனில் பேசினார். சரத்குமாரிடம் அந்த நபர், ‘தான் கோவையைச் சேர்ந்தவர் என்றும் தான் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் என்றும் சாப்ட்வேர் ஒன்றின் உதவி பிரபலங்களின் குரலில்தான் பேசி வருவதாகவும் கூறினார் 
 
அந்த நபரிடம் என்னுடைய குரலில் நீங்கள் எப்படி பேசலாம் என்று சரத்குமார் கண்டித்ததோடு மட்டுமன்றி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். சென்னை காவல்துறை ஆணையர் இந்த புகார் குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார். சரத்குமார் போலவே வேறு பிரபலங்கள் குரலிலும் அந்த நபர் பேசினாரா என்றும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
அடுத்த கட்டுரையில்
6 மாதத்தில் ஆட்சி மாற்றம், ஸ்டாலின் தான் முதல்வர்: காங்கிரஸ் எம்பி ஆரூடம்