கௌதமி அளித்த நில மோசடி புகார்: தலைமறைவாக இருந்த 6 பேர் கேரளாவில் கைது!
நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் தேடப்பட்டு வந்த ஆறு பேர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தனக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக நடிகை கௌதமி, அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் அழகப்பன் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் திடீரென தலைமறைவாகினர். அவர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது கேரள மாநிலம் திருச்சூரில் அழகப்பன் அவரது மனைவி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
அவர்களை சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நாளை அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேர் தலைமறைவாக இருந்த நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதால் அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran